பயணியின் உயிரை காப்பாற்றிய ஶ்ரீலங்கன் விமான பணிக்குழு
ஶ்ரீலங்கன் விமானத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்ற அந்த விமானத்தின் பணிக்குழாமினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
இதன்போது விமானத்தின் வழித்தடத்தை மாற்றி இந்தோனேசியாவில் விமானத்தை தரையிறக்க விமானி தீா்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னா் உயிருக்கு போராடியவா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் தற்போது அவர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குணமடைந்த நபர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளாா்.
கருத்துகள்
கருத்துரையிடுக