பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் கற்பழிப்பு!
 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்.
இவரது சகோதரிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக நெல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணின் சகோதரியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு துணையாக இளம்பெண் ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருந்து கவனித்து வந்தார். நேற்று சகோதரிக்கு மருந்து வாங்கி வரும்படி தெரிவித்தனர்.
மருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு இளம்பெண் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டார். அவர் நெல்லூர் காந்தி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாக இருந்தது. இளம்பெண்ணை பின்தொடர்ந்து ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.
அவர்கள் இளம்பெண்ணின் அருகில் சென்று வழி கேட்பது போல பேச்சு கொடுத்தனர். அப்போது இளம்பெண் ஆட்டோவிற்கு அருகில் சென்று அவர்களிடம் பேசினார். அந்த நேரத்தில் ரோட்டில் மக்கள் நடமாட்டம் இல்லை. திடீரென ஆட்டோவில் இருந்த கும்பல் இளம்பெண்ணை இழுத்து ஆட்டோவில் தூக்கி போட்டனர்.
மேலும் அவர் சத்தம் போடாமல் இருக்க கைகளால் வாயை பொத்திக்கொண்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ அங்கிருந்து புறப்பட்டது. நெல்லூர் அடுத்த கோலக சாலையில் இளம்பெண்ணை கடத்திச் சென்றனர். அங்குள்ள தனியார் பள்ளி அருகே பெரிய புதர் பகுதி உள்ளது. அந்த பகுதிக்கு இளம்பெண்ணை கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை மாறி மாறி கற்பழித்தனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. மேலும் இளம்பெண்ணை அவர்களது நண்பர்களுக்கும் விருந்தாக்க முடிவு செய்தனர். இளம்பெண்ணை கடத்தி வைத்திருப்பது குறித்து அவர்களது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அவரது நண்பர்கள் 5 பேர் காரில் அங்கு விரைந்து வந்தனர். அவர்களும் சேர்ந்து இளம்பெண்ணை கற்பழித்தனர். இதனால் வலி தாங்க முடியாமல் இளம்பெண் கதறி அழுதார். சத்தம் கேட்டு அந்தப்பகுதி வழியாக சென்ற சிலர் அங்கு வந்தனர். அவர்களை 9 பேர் கொண்ட கும்பல் மிரட்டி விரட்டி அடித்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய பொதுமக்கள் இதுகுறித்து வேட்டையப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் இளம்பெண்ணை அங்கேயே போட்டுவிட்டு கும்பல் ஆட்டோ மற்றும் கார்களில் தப்பி சென்று விட்டனர். பொலிஸார் புதர் பகுதியில் இருந்து இளம்பெண்ணை மீட்டனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லூர் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஆட்டோ மற்றும் கார்களின் பதிவு எண் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதனை வைத்து பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனியாக செல்லும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.