உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா

 லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற  உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை அவுஸ்திரேலியா வென்றது

 

அந்த வகையில், முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 469 ஓட்டங்ளை பெற்ற நிலையில், களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

இதனை தொடரந்து 173 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் விளையாடிய அவுஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா வெற்றிபெற 444 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

 

இதனை தொடர்ந்து 444 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா நேற்றைய 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் சேர்த்திருந்தது.

 

இந்நிலையில், இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கின.

 

கோலி 49 ஓட்டங்களுடனும், ஜடேஜா (0) ஓட்டம் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சற்று நிலைத்து நின்ற ரஹானே 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷர்துல் (0)  எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். உமேஷ் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய பரத் 23 ஓட்டங்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்

 

இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை அவுஸ்திரேலியா வென்றது. இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கோப்பையை வென்ற அவுஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.