ஜனாதிபதியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்திப்புஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் , கட்சித் தலைவரின் அறிவுறுத்தல் இன்றி ஜனாதிபதியுடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபடுவதில்லை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அரசியல் கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.