காணாமற்போன Titan நீர்மூழ்கிக் கப்பல்; 5 பயணிகள் மரணத்திற்கு இரங்கல் 

அட்லாண்டிக் கடலுக்குள் காணாமற்போன Titan நீர்மூழ்கிக் கப்பல் வெடித்திருப்பதுபோல் தெரிவதாகவும் அதில் இருந்த 5 பயணிகள் மாண்டதாகவும் அமெரிக்கக் கடலோர காவற்படை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.தேடல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மாண்டவர்களின் குடும்பங்களுக்கு OceanGate Expeditions நிறுவனம் இரங்கல் தெரிவித்தது.”மாண்ட பயணிகள் கடல்களை ஆராய்வதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் அதிகளவில் ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களது நினைவுகள் எப்போதும் எங்கள் மனங்களில் நிலைத்து நிற்கும். அவர்களது குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்,” என அது கூறியது.

அந்த ஐவரும் OceanGate Expeditions நிறுவனத்தின் Titan நீர்மூழ்கிக் கப்பலில் கடலடியில் இருக்கும் Titanic கப்பலைப் பார்க்கச் சென்றிருந்தனர்.தேடல் பணியில் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆளில்லா இயந்திர மனிதக் கருவி நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளைக் கண்டுபிடித்தது.அந்தச் சிதைவுகள் 4 கிலோமீட்டர் ஆழத்தில் Titanicகப்பலிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சிதறி கிடந்தன.சிதைவுகள் சிதறி கிடப்பதை வைத்து பார்க்கும்போது நீர்மூழ்கிக் கப்பல் உள்பகுதியிலிருந்து வெடித்திருப்பதைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட நீழ்மூழ்கிக் கப்பலுடனான தொடர்பு ஒன்றே முக்கால் மணி நேரத்திற்குப் பின் துண்டிக்கப்பட்டது.கப்பல் எப்போது செயல் இழந்துபோனது என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த சில நாள்களாகப் பல நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் காணாமற்போன Titan நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.