ஆத்துசேனை,கிடச்சிமடு வீதிகள் 12 கோடி ரூபா செலவில் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களினால் துரிதமாக அபிவிருத்தி:-



கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எல்லைக்குள் உட்பட்ட ஆத்து சேனை,கிடச்சிமடு கிராம வீதிகள் மிக நீண்ட காலமாக கவனிப்பார் அற்ற நிலையில்; மக்கள் செல்ல முடியாது ; குன்றும் குழியுமாகக் காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் அதிகளவான விவசாய செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகள் தினம் தோறும் பல்வேறு சிரமங்களை மேற்கொண்டனர். இவைகளைக் கருதிக் கொண்டு ஜனநாயக ஐக்கிய முன்னணியின் காவத்தமுனை அமைப்பாளர் மௌலவி சியாம் , கோறளைப்பற்று மேற்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜஃபர், அப்பிரதேச விவசாய அமைப்புகள் மற்றும் ஜாமியூல் அக்பர் பள்ளிவாசல் நிருவாகத்தினர் கௌரவ சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் அவர்களின் கல்குடா தொகுதி இணைப்பாளரும் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கல்குடா தொகுதி அமைப்பாளருமாகிய எம்.ஜவாத் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அதனை அடுத்து அதனை அமைச்சரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்ற அமைச்சரின் இணைப்பாளர் அவர்கள் பிரதேச மக்களின் நீண்ட கால பிரச்சனைக்குத் தீர்வு காணும் முகமாக கௌரவ சுற்றாடல் அமைச்சரின் ஊடாக 12 கோடி செலவில் கார்பெட் வீதியாக  இப்பிரதேச வீதிகளை புனர்நிர்மானம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.இதனை அடுத்து அமைச்சர் அவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக இப்பிரதேச மக்கள் 09.07.2023 திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்து இதன்போது அமைச்சர் நசீர் அகமட் அவர்களின் மகத்தான பணிக்கு பிரதேச மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என அமைச்சரின் இணைப்பாளர்கள் ஊடாக தெரிவித்துக் கொண்டார். வீதி வேலைகள் அனைத்தும் பூர்த்தியாகி திறப்பு விழாவிற்கு கௌரவ அமைச்சர் அவர்களை அழைத்து வருமாறு அமைச்சரின் இணைப்பாளருக்கு பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தமது கோரிக்கையை முன் வைத்தனர்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.