Update :- மன்னம்பிட்டி பஸ் விபத்து : சாரதிக்கு விளக்கமறியல்


Update :- மன்னம்பிட்டி பஸ் விபத்து : சாரதிக்கு விளக்கமறியல்

பொலனறுவை - மன்னம்பிட்டி பகுதியில் நேற்று (09) விபத்துக்குள்ளான பஸ்சை செலுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



பொலனறுவை நீதிவான் நீதிமன்றில் குறித்த நபர் இன்று (10) முன்னிலைப்படுத்தப்பட்டார்.



எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.



இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.



இந்த விபத்தில் காயமடைந்த 41 பேர் மன்னம்பிட்டிய மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள்