இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் ஆரம்பமானது.


நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 


அதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ஓட்டத்தில் ஒல் அவுட்டானது. 


அந்த அணியின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 


இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 


இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா களமிறங்கினர். 


இருவரும் நிதானமாக துடுப்பெடுத்தாடினர். முதல் நாள் முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 


ஜெய்ஸ்வால் 40 ஓட்டமும், ரோகித் சர்மா 30 ஓட்டமும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.