சம்மாந்துறை திறாஸாத்துல் இஸ்லாமிய்யா கலாபீடத்தின் ஏற்பாட்டில்க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய பெண் மாணவிகளுக்கான இலவச இஸ்லாமிய உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு
சம்மாந்துறை திறாஸாத்துல் இஸ்லாமிய்யா கலாபீடத்தின் ஏற்பாட்டில்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய பெண் மாணவிகளுக்கான இலவச இஸ்லாமிய உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு
சம்மாந்துறை திறாஸாத்துல் இஸ்லாமிய்யா கலாபீடத்தின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய பெண் மாணவிகளுக்கான இஸ்லாமிய உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (ஜுலை 04) காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை கலாபீடத்தின் அதிபர் மௌலவி R. அஸ்மதுல்லாஹ் தப்லீகி மற்றும் திட்டமிடல் பணிப்பாளரும் விரிவுரையாளருமான ஏ.ஆர்.கே. அபீக் காரியப்பர் (நளீமி) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 4 முக்கிய வளவாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். வளவாளர்களாக சம்மாந்துறை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் கலாநிதி எஃப்.எச்.ஏ. சிப்லி மற்றும் திறாஸாதுல் இஸ்லாமிய்யாவின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அல் ஹாபிழ் ஏ.எல்.எம். றிப்கான் (நளீமி), சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வில் வளவாளர்களாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினரும் சம்மாந்துறை திராஸாதுல் இஸ்லாமிய்யாவின் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். அமீர் (நளீமி) மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவரும் சம்மாந்துறை திராஸாத்துல் இஸ்லாமிய்யாவின் தவிசாளருமான அல்ஹாஜ் அஷ்ஷெய்க் கே.எம்.கே. ஏ. றம்ஸீன் காரியப்பர் (தப்லீகி)ஆகியோர் சிறப்பு வளவாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
க.பொ.த சாதாரண தரம் எழுதிய மாணவர்களின் அடுத்தகட்ட உயர்தர கல்வித்தரத்தினை உயர்த்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்தரங்கில் உயர்தர கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு திட்டமிடுவது, பாடங்கள் தெரிவு உள்ளிட்ட பல பிரயோசனமான விடயங்கள் பற்றி மாணவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
சம்மாந்துறை திராஸாதுல் இஸ்லாமிய்யா கலாபீடமானது சுமார் 25ஆண்டுகளாக இஸ்லாமிய குர்ஆன் சுன்னா வழிகாட்டல் மற்றும் இதுவரை சுமார் நூற்றுக்கணக்கான மௌலவியாக்கள் ஹாபிழாக்களை உருவாக்கியுள்ளதோடு, தற்போது அக்கலாபீடத்தின் அடுத்த மைல்கல்லாக சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களை மௌலவியா கற்கை நிறைவோடு பல்கலைகழக அனுமதிக்கான வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கின்ற வகையில் பெண்களுக்கான முழு நேர 5வருட கற்கைநெறியினை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள கல்வித் திட்டத்துடன் , கிழக்கு மாகாணத்தின் தலைசிறந்த விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர் குழாமை கொண்ட நிர்வாக கட்டமைப்போடு நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இக்கற்கை நெறிக்காக இரண்டாம் கட்ட மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
எதிர்வரும் 2023/07/15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய பெண் மாணவிகளுக்கான இலவச இஸ்லாமிய உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்வுக்கு விரிவுரையாளர்கள், நிருவாக உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், கலாபீட மாணவர்கள், சாதாரண தரப் பரீட்சை எழுதிய பெண் மாணவிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்படத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக