கோறளைப்பற்று மத்தி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

TestingRikas
By -
0
கோறளைப்பற்று மத்தி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (12) மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும், சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில்,திருமதி .ரமீஸா உதவி பிரதேச செயலாளர் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஏ.ஏ.நாஸர்,
உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ருவைத் , முன்னாள் ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.ஐ. தஸ்லிம், அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பதிவாளர் பிரிவு ஒன்றை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பெற்றுத்தருமாறும், பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனை முற்றாக ஒழிப்பதற்கு பொலிஸ் காவலரன் ஒன்றை அமைத்து தருமாறு மற்றும் போதைப் பொருள் பாவனை தடுப்பதற்காக செயற்பட்டு வரும் இளைஞர் அமைப்பை பதிவு செய்து தருமாறும் அமைச்சரிடம் பொது மக்கள் கேட்டுக் கொண்டனர்.
எமது பிரதேச எல்லைக்குள் உட்பட்ட காணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. மற்றும் இன்று 100 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் கௌரவ சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களினால் கையளிக்கப்பட்டது மேலும் 100 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படவுள்ளது.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)