யாழில் சனத் ஜயசூரிய! செல்ஃபி எடுக்க முண்டியடித்த பொது மக்கள்!


யாழில் சனத் ஜயசூரிய! செல்ஃபி எடுக்க முண்டியடித்த பொது மக்கள்!


யாழ் நகரில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார் - 2023 இன்று (16) இரண்டாவது நாளாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்றது.

இதன்போது விருந்தினராக கலந்து கொண்ட சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் யுவதிகள் அரச ஊழியர்கள் என பலரும் முண்டியடித்தை அவதானிக்க முடிந்தது.

இதன்போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் உடனிருந்தார்.

 



-யாழ். நிருபர் பிரதீபன்-

கருத்துகள்