நெருக்கடி முகாமைத்துவ கை நூல் வெளியீடும் பல்துறை சார் புத்திஜீவிகளுடனான கலந்துரையாடலும்!
CAFOD நிறுவனத்தின் நிதியுதவியில் அரச சார்பற்ற நிறுவனமான Peace & Community Action (PCA) நடைமுறைப்படுத்தும் STEPS செயல்திட்டத்தின் கீழ் மாவட்ட நல்லிணக்க குழு செயலணியின் வேண்டுகோளுக்கு இனங்க "நெருக்கடி முகாமைத்துவ கை நூல் வெளியீடும் பல்துறை சார் புத்திஜீவிகளுடனான கலந்துரையாடலும்" இன்று (27) அம்பாரை ஆரியவன் ரெஸ்டூவரன்டில் ல் மாவட்ட நல்லிணக்க செயலனியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இக்கைந்நூலின் நோக்கம் நெருக்கடி நேரத்தில் ஏற்படுகின்ற அல்லது தோற்றம் பெறுகின்ற அசாதாரண நிலமைகளை எவ்வாறு கையாள்வது அல்லது முகாமைத்துவம் செய்வது என்கின்ற விடயங்களையும் பொது மக்களின் புரிந்து கொள்ளலுக்காக ஆவண வடிவில் வெளிக்கொணர்வதும் அதை நெருக்கடி நிலமைகளில் வழிகாட்டிகளாக செயற்படுகின்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுடைய செயற்பாட்டிற்கு உதவியாக இக்கைந்நூலில் சொல்லப்பட்ட விடயங்களை பயன்படுத்தலாம் என்பதும் அவ்வாறு பயன்படுத்துகின்ற பொழுது வன்முறைகளை குறைக்கக்கூடிய சாத்தியமும் காணப்படும் என்பதுமேயாகும்.
முதற்கட்ட கன்னி வெளியீடாக அறிமுகம் செய்யப்பட்ட இந்நூல் பற்றிய கருத்துப் பகிர்வு கலந்துரையாடல் அம்பாரை மாவட்டத்தில் பல்துறை சார் புத்திஜீவிகளுடன் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வுக்கு PCA ன் தேசிய பணிப்பாளர் T. தயாபரன் கலந்து கொண்டதுடன் பல்துறை சார் அதிதிகளும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக