⏩ மருத்துவமனைகளில் தாய்மார்களும் குழந்தைகளும் மரணிக்கிறார்கள் என்று உதவாக்கரை எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி...

- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

தாய்மார்களும் குழந்தைகளும் வைத்தியசாலைகளில் உயிரிழப்பதையிட்டு உதவாக்கரை எதிர்க்கட்சிகள்  மகிழ்ச்சியடைவதாக   ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு நடந்த உரையாடல் பின்வருமாறு:

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ ( SLPP) - நான் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர். நுவரெலியா வைத்தியசாலையில் பத்து பேர் பார்வையிழந்தது சிறிய விடயமல்ல. மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாதுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், சுகாதாரப் பிரிவு பின் தள்ளிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. மேலும் மருத்துவர்கள் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள். இந்நிலையில் பாராளுமன்றத்தில் அமர்ந்து என்ன செய்கின்றீர்கள் என மக்கள் எங்களிடம் கேட்கின்றனர். எனவே, பின் தள்ளிய நிலையில் இருக்குன் சுகாதாரப் பிரிவைப் பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ.பெ.) - கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் இங்கு தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வருகின்றது. அவர்களுக்குப் பதில் சொல்லப் பொறுப்பான அமைச்சர் இங்கு இல்லை. சபைக்கு வரும்போது இந்த விஷயங்களைப் பேசலாம். தாய்மார்களும் குழந்தைகளும் உயிரிழக்கிறார்கள் என்று உதவாக்கரை எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியடைகின்றன. அமைச்சர் சபைக்கு வரும்போது இதைப் பற்றி பேசலாம்.

2023.07.20

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.