வைத்தியசாலையின் 4 ஆம் மாடியிலிருந்து குதித்து நோயாளி உயிரிழப்பு

வைத்தியசாலையின் 4 ஆம் மாடியிலிருந்து குதித்து நோயாளி உயிரிழப்பு


மாளிகாவத்தை பகுதியிலுள்ள சிறுநீரக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் வைத்தியசாலையின் 4வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வெலி ஓயா பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்