இலங்கையில் பாரிய சுகாதார நெருக்கடியாக மாற்றமடையும் பொருளாதார நெருக்கடி பகிரங்க எச்சரிக்கை!


நோய் நிலைமைகளால் ஏற்படக்கூடிய மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாக சுகாதாரத்துறை இயங்க வேண்டுமே தவிர, சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவாக தொடர் மரணங்கள் ஏற்படக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் சுகாதாரத்துறைசார் தொழில் வல்லுனர்களின் வெளியேற்றம் மற்றும் மருந்துப்பொருள் கொள்வனவுடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய தீர்மானங்கள் என்பவற்றால் பொருளாதார நெருக்கடியானது தற்போது பாரிய சுகாதார நெருக்கடியாக மாற்றமடைந்து வருகின்றதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (28.08.2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.