சம்மாந்துறை மற்றும் கல்முனையில் ஐ.தே.க.வின் மக்கள் சந்திப்பு ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் சந்திப்பு இன்று சனிக்கிழமை (05) மாலை 3.00 மணியளவில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் கல்முனைத் தொகுதி செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை (06) காலை 10.00 மணிக்கு கல்முனைக்குடி அல்-பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுகளில்,  கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் தயா கமகே, முன்னாள் பிரதி அமைச்சர் அனோமா கமகே உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வுகளில் கட்சியின் அனைத்து ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களைக் கலந்து கொள்ளுமாறு கல்முனை மற்றும் சம்மாந்துறை தொகுதிகளுக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அழைப்பு விடுத்துள்ளார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.