மெனிங்கோகோல் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் ஜாஎல பிரதேசத்தில் வசிப்பவர் என்பதனால் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அவருக்கு நெருக்கமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

மெனிங்கோகோல் பாக்டீரியம் மூளை திசுக்களைத் தாக்கி மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டிய பிரதிப் பணிப்பாளர் நாயகம், மூளைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கண்டறியப்படுவதாகவும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் குணமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவ்வாறான சிறுவர்கள் பொதுவாக அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டால் அவர்கள் குணமடைந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.