யேமன் சேத்திற்கு மிகப்பெரும், உதவியை வழங்கிய ஸவுதி

மன்னர் ஸல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஆகியோரின் பணிப்புரைக்கிணங்க எமன் அரசாங்கத்துடன் உள்ள நெருக்கமான உறவு சகோதரத்துவத்தின் பயனாக எமனின் பட்ஜட் பற்றாகுறையினை சீர்செய்ய உதவுமாறு எமன் அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று எமன் தலைமைத்துவ சபையின் அரசாங்கத்திற்கு உதவும் வகையில் 1.2 பில்லியம் அமெரிக்க டொலர்களை ஸவுதி அரேபியா வழங்கியுள்ளது. 



எமனின் தொடர்ச்சியான அபிவிருத்தி எமனின் உட்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதார முன்னேற்றம், மக்களின் துயர் துடைப்பதற்காக ஸவுதி அரேபியாவினால் 2018ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வரும் உதவியோடு தற்போது வழங்கப்பட்டுள்ள உதவியானது எமன் அரசாங்கத்தின் சம்பளம் ஏனைய ஊழியர்களின் சம்பளம் மற்றும் நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக எமனுக்கு ஸவுதியினால் வழங்குப்பட்டுவரும் ஆதரவு மற்றும் பெரும் உதவியானது எமனின் பட்ஜட், பொருளாதார முன்னேற்றம், தனிநபர் செலவுகளைக் குறைத்தல், உட்கட்டுமானப் பணிகளை முன்னேற்றல், அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளையும் அபிவிருத்தி செய்தல்,  நாளாந்த வாழ்க்கையை இலகுபடுத்தல், போன்றவற்றுக்கு நிச்சயம் உதவும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 




இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு எமன் நிதி அமைச்சர் ஸாலிம் அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் , ‘‘ஸவுதி அரேபியாவினால் எமனுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 1.2 பில்லியன் டொலர் உதவியானது ஸவுதி அரேபிய மன்னர் ஸல்மான் மற்றும் அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் எமனின் பொருளாதார இஸ்தீரம், மக்களின் வாழ்க்கைச் சுமைக்குறைப்பு, பல்வேறு துறைகளில் எமன் மக்களுக்களை என்பவற்றில் அவர்கள் காட்டும் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் எடுத்துறைக்கின்றது. மேலும் இவ்வுதவியானது எங்களின் உடன் பிறப்புக்களான ஸவுதி அரேபியா எமக்கு பல தசாப்தங்களாகச் செய்துவரும் உதவியின் தொடர்ச்சியே அன்றி இது புதியவை கிடையாது. எல்லா சந்தர்ப்பங்களிலும் எமனுடன் ஸவுதி அரேபியா பக்கபலமாக நின்றுள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகின்றது. 



மேலும் ஸவுதி அரேபியா எமனின் ரியால் வீழ்ந்துவிடாமல் டொலருக்கு நிகரான அதன் பெறுமதியைப் பாதுகாப்பதற்கும் நிலைப்படுத்தவும் அதன் மத்திய வங்கியில் 2012-2022வரை 4 பில்லியன்  அமெரிக்க டொலர்களை வைப்பிலிட்டிருக்கின்றது. குறிப்பாக 2018ஆம் ஆண்டு ஸவுதி அரேபியாவினால் எமன் மத்திய வங்கியில் வைப்பிலடப்பட்ட 2பில்லியன் அமெரிக்க டொலரானது எமனுக்கு தேவையான கோதுமை, சமையல் எண்ணை, அரசி, சீனி, பால்மா போன்ற உணவுப் பொருட்களின் இறக்குமதிச் செலவுகளுக்காகவே வைப்பிலிடப்பட்டது. இதன் மூலம் 2019ஆம் ஆண்டு சர்வதேச அளவில் எண்ணை விலையில் ஏற்பட்ட மற்றத்திலும் பார்க்க எமனில் பெற்றோல், டீசலின் விலை 36சதவிகிதத்தினால் குறைந்ததோடு உணவுப் பொருட்களின் விலை 16-19 விகிதம் வரை குறைவடைந்தது எமனின் பொருளாதாரம் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி 0.75- 1.4 வீதம் வளர்ச்சி கண்டது. 



கணக்கிட முடியாத அளவு பெற்றோல் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் விநியோகம், மின்சாரம், உட்கட்டுமானம் போன்ற துறைகளில் ஸவுதி அரேபியா வழங்கிவரும் உதவியினால் சுமார் 16ஆயிரம் புதிய வேலை வாய்ப்புக்கள் எமனில் உருவாகியுள்ளது. மேலும் 2018ஆண்டு முதல் கல்வி, சுகாதரம், எரிவாயு, போக்குவரத்து, நீர், விவசாயம், கடற் றொழில், அரசாங்கத் துறைகள், பொருளாதார வளர்ச்சி போன்ற துறைகளில் எமனின் பிரதாணமான 7 பிராந்தியங்களில் இன்று வரை 229பாரிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது.”

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.