ஆசிய கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு

 ஆசிய கிண்ண போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கிண்ண தொடர் நடைபெற உள்ளது . 

 கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கிண்ணங்களையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

 இந்நிலையில் உலகக் கிண்ணத்திற்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் வரும் 30ம் திகதி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி இன்று மதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர்  இன்று மதியம் 12 மணியில் இருந்து  தலைவர் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். 

 பின்னர் அஜித் அகர்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது   ஆசிய கிண்ணத்திற்கான அணி அறிவிக்கபட்டது. 

 அதன்படி, இந்திய அணியில், ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, சுப்மான் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணாவும், ரிசர்வ் வீரராக சஞ்சு செம்சுனும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.