மாதுரு ஓயாவில் மாடு வளர்க்கும் நாமல்
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தனது சகாக்கள் மூலமாக மாதுரு ஓயாவை அண்மித்த பிரதேசங்களில் மாடுவளர்ப்புச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்
அப்பிரதேசத்தில் சுமார் 25 ஆயிரம் மாடுகள் இவ்வாறு வளர்க்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது
குறித்த மாடுகளுக்கான மேய்ச்சல் தரையாக கிழக்கு மாகாணத்தின் பெருமளவான நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதன் ஒருபகுதியாகவே மாதுரு ஓயாவின் மயிலத்தமடு பிரதேசத்தில் நீண்ட கால பயிர்ச்செய்கையில் ஈடுபடும் ஆதிவாசிகளை அங்கிருந்து வௌியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆதிவாசிகளை வௌியேற்றும் முயற்சிகளின் பின்னணியில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் செயற்படுவதாக ஆதிவாசிகள் குற்றம் சாட்டியிருந்தனர். 
செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்படுவதில் இந்தியா பாரிய அழுத்தம் பிரயோகித்திருந்தது. அதே வேளை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்‌ஷ குடும்பம் இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்களான பாஜக கட்சியுடன் மிகுந்த நெருக்கத்தைப் பேணி வருகின்றமை அரசியல் வட்டாரங்களில் வௌிப்படையாகத் தெரிந்த விடயமாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.