சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடத்தில்

 சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

 ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக நேற்று (26) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 23 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2,725 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 தரவரிசையில் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும் இந்திய அணி மூன்றாவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் நியுஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் முறையே 4 மற்றும் 5ஆம் இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.