70 வயது கிழவர் அவருக்கு தெரிந்த தொழிலில் உழைத்து சம்பாதிக்கிறார். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

அரசாங்க வேலையில் உள்ளவர்களுக்குதான் 60 வயதில் ஓய்வு; உழைப்பவனுக்கு ஓய்வு கிடையாது.

🔥 இந்த 70 வயசு கிழவரை நம்பிதான் 500 கோடி முதல் போட்டு படம் எடுக்கிறார்கள். அடுத்து 1000 கோடி முதல் போடவும் தயாரா இருக்கிறார்கள்

🔥 இந்த 70 வயது கிழவர் நடக்கும் போது உள்ள வேகம் இப்போதுள்ள  30 வயசு இளைஞரிடம் இருக்குமா என்பதே சந்தேகம்.

🔥 இந்த 70 வயசு கிழவரைத்தான் ஜப்பான் நாட்டில் கோடிக் கணக்கான பேர் கொண்டாடுகிறார்கள்.

🔥 இந்த 70 வயசு கிழவரை பார்த்துதான் 6 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை #சூப்பர்_ஸ்டார் என்று துள்ளி குதிச்சு கை தட்டி ரசிக்கிறார்கள்.

🔥 இந்த 70 வயசு கிழவரைத்தான் அடுத்த நாட்டு (மலேசிய) பிரதமரே வீடு தேடி வந்து பார்த்துட்டு போனார்.

🔥 இந்த 70 வயது கிழவரை உலகத்தில் தெரியாதவங்களே இல்லை.

🔥 தமிழ் திரையுலகில் 45 வருடங்களாக தொடர்ந்து கதாநாயகனாக நடித்து திரையுலகில் #முதல்வனாக இருக்கும் ஒரே நடிகன் இந்த கிழவர்.  

🔥 தமிழ் திரையுலக  வரலாற்றில்  படத்திற்கு 700 கோடி வசூல் செய்து தமிழ் திரையுலகை உலகமே திரும்பி பார்க்க வைத்த ஒரே நடிகன் இந்த கிழவர்.  இந்த வெற்றியை, வசூலை இப்போதுள்ள இளம் நடிகர்கள் மட்டுமல்ல,  அவர்களின் வாரிசுகள் நடிக்க வந்தாலும் முறியடிக்க முடியாது.

🔥 மூன்று மொழிகளில் 100 கோடிக்கு மேல் வசூல் கண்ட ஒரே இந்திய நடிகன் இந்த கிழவர்.

பொறாமைகள் இருக்கத்தானே செய்யும்
வயிறெல்லாம் எறியத்தானே செய்யும். என்னடா இந்த குதிரை ஒடிக்கிட்டே இருக்குன்னு.

அந்த கிழவர் பொதுவாழ்க்கைக்கு வந்து மக்களுக்கு எதிராக செயல்பட்டால் அப்போது விமர்சனம் செய்யுங்கள்.

தன் படத்தை ஓட வைப்பதற்காக அரசியலுக்கு வருகிறேன் என 30 வருடமாக ஏமாற்றுகிறார் என கூறுவதும் நீங்கள் தான்; அரசியலுக்கு வரமட்டார் என நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு நடிகனை அரசியல் எதிரியாக நினைப்பதும் நீங்கள் தான். 

வயது என்பது ஒரு எண் தான், திறமைக்கும் சாதனைக்கும் வயது தடை இல்லை. நம்மால் 70 வயதில் கம்பில்லாமல் நடக்க முடியுமா? 70 வயதில் தினம் 700 ரூபாய் சம்பாதிக்க முடியுமா? என்பது நமக்கு தெரியாது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.