நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உலமா சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தண்ணீர் நமக்கு அத்தியவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது அதன் போதாமை காரணமாக பயிர்கள் இறந்து, கால்நடைகள் உட்பட 7ஏனைய உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நீர்மின் உற்பத்தி கேள்விக்குறியாகி உள்ளது. விவசாய நடவடிக்கைகள் போதுமான நீர் இன்றி தடைப்பட்டிருக்கின்றன.

இதுபோன்ற அசாதாரண நிலைமைகளில் அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபிவழியாகும். அதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.

எனவே எமது பாவங்களுக்காக நாம் தௌபா செய்வதுடன் நாடளாவிய ரீதியில் வறட்சி நீங்கி, மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை வேண்டி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.