உணவில் உப்பின் அளவைக் குறைப்பதால் இதயப் பிரச்சினைகளும் பக்கவாதமும் ஏற்படும் அபாயம் சுமார் 20 விழுக்காடு குறையலாம் என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

உணவில் உப்புச் சேர்ப்போரைக் காட்டிலும் அறவே உப்புச் சேர்க்காதோருக்கு Atrial fibrillation (AF) என்னும் இதய நோய் ஏற்படும் அபாயம் 18% குறைவு என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவ்வப்போது உப்புச் சேர்த்துக்கொள்வோருக்கு அது 15 விழுக்காடு என்றது The Guardian செய்தி நிறுவனம்.வழக்கமாக உப்புச் சேர்த்துக்கொள்வோருக்கு அது 12 விழுக்காடு.தென்கொரியாவின் கியொங்பூக் (Kyungpook) தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அந்த ஆய்வை நடத்தினர்.

AF நோயால் வழக்கத்திற்கு மாறான, வேகமான இதயத் துடிப்பு ஏற்படுகிறது.அதனால் மயக்கம், மூச்சுத் திணறல், சோம்பல், பக்கவாதம் ஆகியவை ஏற்படலாம்.ஆய்வுக்காக பிரிட்டனைச் சேர்ந்த 500,000க்கும் அதிகமானோரின் தகவல்கள் திரட்டப்பட்டன.

ஒவ்வொருவரிடமும் எப்போதெல்லாம் உப்பு உள்ள உணவை உட்கொள்வீர் என்று கேட்கப்பட்டது.அவர்களின் உடல்நலம் 11 ஆண்டுகளுக்குக் கண்காணிக்கப்பட்டதாக The Guardian சொன்னது.தினமும் 6 கிராம் உப்பை உட்கொள்வதே உடலுக்கு நன்மை எனப் பிரிட்டிஷ் இதய அறக்கட்டளையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறினார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.