இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்களிடையே பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு – சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களிடையே நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறுவர்களுக்கு அதிகளவான திரவங்களை வழங்க வேண்டுமென வைத்தியர் பிரிந்துரைத்துள்ளார்.
மேலும், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் சிறுவர்களிடையே பரவக்கூடுமெனவும் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக