வவுனியாவில் நீர்த்தொட்டியில் விழுந்த பெண்குழந்தை உயிரிழப்பு
வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் விழுந்து 2 வயதுடைய பெண்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குழந்தை நேற்று மாலை வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த காணாமல் போனமையை அடுத்து பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர். குழந்தை வீட்டுக்கு அருகில் உள்ள நீர்த்தொட்டியில் விழுந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், முன்னதாகவே உயிரிழந்ததாக வைத்தியசாலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துரையிடுக