A/L பெறுபேறுகள் தொடர்பான செய்தி!



உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருடத்திற்கான  உயர்தரப் பரீட்சை திகதியை மாற்றுவது குறித்து எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்