இலங்கை பெற்றுக்கொண்ட நிதி பரிமாற்ற வசதி தொடர்பான மற்றுமொரு தவணை செலுத்தப்பட்டு விட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் டொலர் பரிமாற்ற வசதி தொடர்பான இரண்டாவது தவணையாக 100 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த பரிமாற்ற கடன் வசதியின் முதல் தவணையாக 50 மில்லியன் டொலர்களை செலுத்த கடந்த மாதம் இலங்கை ஏற்பாடு செய்திருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பங்களாதேஷ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மெஸ்பால் ஹக், மீதமுள்ள 50 மில்லியன் டாலர் இந்த ஆண்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக