அமெரிக்காவில் இந்த மாதம் நடுப்பகுதியில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள பேச்சாளர் பட்டியலின்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவுள்ளார்.


இந்த பொதுச் சபைக்கூட்டத் தொடரில் உலகத் தலைவர்களும், இளம் தலைவர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

குறித்த பொது சபைக் கூட்டம் 'நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல்' என்ற கருத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.