கல்லொழுவை அல் அமானில் புதிய அதிபர் ஆஸிம் சேருக்கு வரவேற்பு

Rihmy Hakeem
By -
3



( மினுவாங்கொடை நிருபர் )

மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவர், மினுவாங்கொடை வலயக் கல்விக் காரியாலயத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அதிபரான கஹட்டோவிட்டவைச் சேர்ந்த எம்.ரீ.எம். ஆஸிம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்  மற்றும் ஊர்ப்பிரமுகர்களினால் பூச்செண்டு வழங்கி  வரவேற்கப்பட்டார். 

முன்னாள் அதிபர் எம்.எச்.எம்.காமில், முன்னாள் பரீட்சை ஆணையாளர் ஏ.எஸ். முஹம்மத் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்திச் சங்க மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் எனப்பலரும் இவ்வரவேற்பு விழா நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 





( மினுவாங்கொடை நிருபர் )

கருத்துரையிடுக

3கருத்துகள்

கருத்துரையிடுக