கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 760 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 760 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (05) இதுவரை 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் ஒருவர் கொரோனா பாதிப்பினால் மரணமடைந்துள்ளதுடன், இதுவரை 09 பேர் கொரோனா பாதிப்பினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவின் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)