பிறந்து 46 நாட்களேயான குழந்தை கொவிட் பாதிப்புடன் மரணம்!

Rihmy Hakeem
By -
0

 கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் பிறந்து 46 நாட்களேயான குழந்தை கொவிட் பாதிப்புடன் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையின் மரணத்திற்கான காரணம் கொவிட் உடன் நுரையீரல் பாதிப்பு என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குழந்தையின் உடல் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதற்கு முன் பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்று கொவிட் பாதிப்புடன் மரணித்தமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)