1985/86 ஆண்டு தொடக்கம் கஹட்டோவிட்ட மண்ணில் நடைபெற்ற அனைத்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளின் இறுதிப் போட்டிகளிலும் மோதிக்கொண்ட அணிகளாக Rock star & Latest திகழ்ந்ததோடு அவற்றில் அநேகமானவற்றை Rock Star வெற்றி கொண்டது.
Sun Star என்று இருந்த அணி ESSEX என்ற பெயருடன் முதல் முறையாக கலந்து கொண்ட ஒரு சுற்றுப்போட்டியான Najmussama சுற்றுப்போட்டியில் Rock Star அணியை அரை இறுதியில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் Latest அணியை சந்திக்கும் வரை இந்த Rock Latest ஆதிக்கம் தொடர்ந்தது. 1994 ம் ஆண்டு நடைபெற்ற இந்த சுற்று போட்டியில் லேட்டஸ்ட் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தொடர்ந்து அதே வருட இறுதியில் நடைபெற்ற Rock Trophy தொடரின் இறுதி போட்டியில் Rock star அணியை ESSEX அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதுடன் Latest அணியின் ஆதிக்கம் சரியத் துவங்கி Rock ESSEX யுகம் ஆரம்பமாகியது.
97/98 காலப் பகுதியில் Renown அணியின் பிரவேசம் மும்முனைப் போட்டியை உருவாக்கியது. 2000ம் ஆண்டின் பின் அத்தாவளை மைதானம் செயலிழந்ததும் பல அணிகள் காணாமல் போனது. பிற்பட்ட காலத்தில் JF அணி தனது ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டது. அதன் பின்பு பல இளைய வீரர்களை கொண்ட அணிகள் தமது செயல்பாடுகளை ஆரம்பித்தாலும் HF மற்றும் BADRIYANS அணிகள் நிலைத்து நிற்கின்றன.
ESSEX, YOUTH, JF, Jinnah, Moon Star அணிகள் தமது பழைய பலத்தை நிரூபித்து வரும் நிலையிலும் தற்போதைய நிலவரப்படி மென்பந்து கிரிக்கெட் போட்டிகளில் BADRIYANS அணி தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்தி வருகின்றது.
இந்நிலையில் தான் நேற்றைய தினம் கமத்தை மைதானத்தில் நடைபெற்ற KPL mini சுற்றுப்போட்டியில் பழைய அணிகளின் பெயர்கள் அணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் 1993ம் ஆண்டுக்குப் பின் Rock vs Latest அணிகள் இறுதிப் போட்டியில் மோதியது சுவாரசியமாக இருந்தது.
இந்த சுற்று போட்டியை ஏற்பாடு செய்த KPL FOUNDATION அமைப்பு தமது பணியை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
Afham Nizam.

