![]() |
| Pic - Adaderana |
அத்தனகல்ல, நாகொட பிரதேசத்தில் அத்தனகல்ல ஓயாவில் நேற்றைய தினம் (21) ஆடைகள் இன்றிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சடலமானது வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

