கஹட்டோவிட்ட 369 பிரிவில் முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ள அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 

படம் - AI

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்


​369 கஹட்டோவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.


  • திகதி: 24.06.2026 (புதன்கிழமை)
  • நேரம்: மாலை 5:00 மணி
  • இடம்: கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

பங்கேற்க வேண்டியவர்கள்:

  • ​கஹட்டோவிட்ட 369 பிரிவில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படக்கூடிய வீடுகளில் வசிப்பவர்கள்.
  • ​கிராம அபிவிருத்திச் சங்கம், பிரஜாசக்தி, சமுர்த்தி, இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள்.
  • ​இப்பிரிவுக்குப் பொறுப்பான அனைத்து அரச உத்தியோகத்தர்கள்.

​இக்கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அத்தனகல்ல பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அனைவரும் இதில் கட்டாயம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


​மேலும், அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பான தங்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின், அவற்றையும் இக்கூட்டத்திற்கு வரும்போது எடுத்து வருமாறும் கஹட்டோவிட்ட 369 பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)