மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச முஆய்தாய் பாடசாலைகள் மட்ட சாம்பியன்ஷிப் - 2026 (Muaythai International School Level Championship 2026) போட்டியில் கலந்து கொள்வதற்காக, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 34 வீரர்கள் அடங்கிய குழுவினர் நேற்று (15.06.2026) திங்கட்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.
இன்று (16.06.2026) முதல் ஜூன் 22ஆம் தேதி வரை மலேசியாவில் இப்போட்டிகள் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளன.
கஹட்டோவிட்ட UMC இன் பங்களிப்பு
இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்ற 34 வீரர்கள் அடங்கிய இந்த அணியில், கம்பஹா மாவட்டம் கஹட்டோவிட்ட யு.எம்.சி. (Kahatowita UMC) அமைப்பைச் சேர்ந்த மூன்று திறமைமிக்க இளம் வீரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்கேற்கும் கஹட்டோவிட்ட வீரர்கள் மற்றும் பாடசாலை விபரங்கள்:
N. H. M. நுவைர் (N M H Nuwair) – கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம்
M. K. சதாத் (M K Sadath) – கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம்
M. I. மிஷாரி (M I Mishary) – நிட்டம்புவ பிரிட்டிஷ் வே (British Way) சர்வதேசப் பாடசாலை
இவர்களுடன் UMC Kahatowita அமைப்பின் நிறுவனரும், இவ்வீரர்களின் பிரதான பயிற்சியாளருமான முஆத் இப்திகார் அவர்களும் இக்குழுவுடன் மலேசியா சென்றுள்ளார்.
பயிற்சியாளரின் கருத்து
இப்போட்டி குறித்து கருத்துத் தெரிவித்த பயிற்சியாளர் சகோதரர் முஆத் இப்திகார்,
"ஏனைய நாடுகளில் இருந்து வருகை தந்துள்ள வீரர்கள் தத்தமது நாடுகளையும் பாடசாலைகளையும் உத்தியோகபூர்வமாகப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்கும் அதேவேளை, இலங்கையிலிருந்து சென்றுள்ள இந்த வீரர்கள் முஆய்தாய் அமைப்பின் (Muaythai Association) சார்பாகவே இதில் களம் காண்கின்றனர்" எனப் பெற்றோர் ஒருவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி - கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல்




