அரசாங்க தகவல் திணைக்களதத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Rihmy Hakeem
By -
0

 

கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான “அசிந்திசி பியவர” விழிப்புணர்வு கருத்தரங்கு 17 ஆம் திகதி



​அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான “அசிந்திசி பியவர” விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு கருத்தரங்கு, இம்மாதம் 17 ஆம் திகதி முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திரு. ஹர்ஷ பண்டார அவர்களின் தலைமையில் கம்பஹா மாவட்ட செயலகத்தின் முதலாவது மாடியில் உள்ள லக்ஸிய நே மந்திரி கேட்போர் கூடத்தில் (Laksiya Nae Mandira Auditorium) நடைபெறவுள்ளது.


​கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களையும் இதில் பங்கெடுக்கச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், ஊடகத்துறையின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்து ஊடகவியலாளர்களின் அறிவை இற்றைப்படுத்துதல் (Update), அவர்களது தொழில்முறை மேம்பாட்டை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லுதல் மற்றும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளில் ஊடகவியலாளர்களை மேலும் வலுவாகவும் நெருக்கமாகவும் ஈடுபடுத்துவதுமே இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.


​இக்கருத்தரங்கின் வரவேற்புரையை கம்பஹா மாவட்ட செயலாளர்/அரசாங்க அதிபர் திரு. லலிந்த கமகே ஆற்றவுள்ளதுடன், “ஊடகவியலில் செயற்கை நுண்ணறிவை (AI) சாதகமாகப் பயன்படுத்துதல்” என்ற தலைப்பில் கலாநிதி சஞ்சன ஹத்தொடுவ அவர்களும், “ஊடக ஒழுக்கநெறிகள் மற்றும் இலங்கையின் தற்போதைய ஊடகப் பயன்பாடு” என்ற தலைப்பில் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் திரு. பிரசன்ன பெரேரா அவர்களும் உரையாற்றவுள்ளனர். அத்துடன் சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஜனாதிபதி ஊடக ஆலோசகருமான திரு. சந்தன சூரியபண்டார அவர்களின் சிறப்பு உரையொன்றும் இடம்பெறவுள்ளது.


கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)