வத்துப்பிட்டிவலை ஆதார வைத்தியசாலைக்குத் தேவையான Glucose Stripsகளை வழங்கி வைத்த பிரதேச சபை உறுப்பினர் பிர்தவ்ஸ்

Rihmy Hakeem
By -
0

 


வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் விடுதி சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பதற்கு குளுக்கோஸ் கீற்றுகள் (Glucose Strips) மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுவதை அறிந்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் A.B.G.பிர்தவ்ஸ் 75 நோயாளிகளுக்குத் தேவையான குளுக்கோஸ் கீற்றுகளை வைத்திய அத்தியட்சகரிடம் கையளித்தார்.


பிரதேச சபை உறுப்பினர் ​பிர்தவ்ஸ் அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)