கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய 20 வயதின் கீழ் கால்பந்து அணி 2026 ஆம் ஆண்டுக்கான All Island Football Tournament தொடரின் நேற்றைய போட்டியில் (10) கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதுடன் பிரிவு - 01 (Division - 01) இற்கும் தெரிவாகியுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற நேற்றைய போட்டி 0 - 0 என்ற அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்த நிலையில் பெனால்டி முறையில் 3 - 2 அடிப்படையில் புனித தோமஸ் கல்லூரி அணியை வீழ்த்தி கஹட்டோவிட்ட அல் பத்ரியா அணி வெற்றி பெற்றமை சிறப்பம்சமாகும்.
அரையிறுதிப் போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணி கிண்ணியா அல் அமீன் மகா வித்தியாலய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

