பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி : பிரிவு 1 இற்குத் தகுதி பெற்றதோடு அகில இலங்கை ரீதியில் 3ஆம் இடத்தைப் பிடித்தது கஹட்டோவிட்ட அல் பத்ரியா!

Rihmy Hakeem
By -
0

இலங்கை பாடசாலை கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அகில இலங்கை ரீதியில் 20 வயதின் கீழ் பாடசாலை அணிகளுக்கு இடையிலான பிரிவு 02 (Division - 02) கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்று (12) இடம்பெற்ற போட்டியில் குருநாகல் அல் அமீன் மத்திய கல்லூரி அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணி வெற்றி பெற்றது.


அதனடிப்படையில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணி மேற்படி சுற்றுப்போட்டியில் அகில இலங்கை ரீதியில் மூன்றாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 


கஹட்டோவிட்ட அல் பத்ரியா அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் பிரிவு - 01 (Division - 01) இற்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)