நீர்கொழும்பு, போருத்தோட்டையில் ஆரம்பமாகிய தேசிய மீலாதுன் நபி விழாவின் இணைந்த நிகழ்ச்சிகள்

Rihmy Hakeem
By -
0

 42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள் போருதோட்டையில் ஆரம்பமாகியுள்ளன.



22-08-2026


  • பிரதி சபாநாயகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாம் பார்வையிடப்பட்டது.

  • அல்-பலாஹ் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போர்ட்(Smart Board) இயந்திரம் ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.


42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூக நலன்புரி நிகழ்ச்சித் தொடர் இன்று (ஆகஸ்ட் 22) நீர்கொழும்பு, போருதோட்டைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஆரம்பமானது.


புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நினைவுத் தொடரின் ஆரம்ப நிகழ்வு, போருதோட்டை பிரதான ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து இடம்பெற்றது.


அதனைத் தொடர்ந்து, கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள், மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்கள் உள்ளிட்ட அழைப்பாளர்களின் பங்களிப்புடன், அல்-பலாஹ் மகா வித்தியாலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாமின் பணிகள் பார்வையிடப்பட்டு கண்காணிக்கப்பட்டன.


அவ்வேளையில், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்க, பேருவளையைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் லத்தீப் ஹாஜியார் அவர்களினால் அல்-பலாஹ் மகா வித்தியாலய மாணவச் செல்வங்களுக்காக நவீன ஸ்மார்ட் போர்ட் (Smart Board) இயந்திரம் ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அப்ரூஸ் அஹமட் மற்றும் அத்திணைக்களத்தின் அதிகாரிகள், நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள், மௌலவிமார்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.


முஷாரிப் மொஹிதீன்

ஊடக செயலாளர்,

சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் அவர்களின் அலுவலகம்.











கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)