ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் விசேட வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 26) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அமைப்பின் தலைவர் எம்.பீ.எம். பைறூஸ் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் முதல் அமர்வில் இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதுவர் கலாநிதி செமி லுத்ஃபு துர்குத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் முன்னாள் தூதுவரும் சிரேஷ்ட இராஜதந்திரியுமான பி.எம். அம்ஸா சிறப்புப் பேச்சாளராகவும், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைப்பின் புதிய இணையத்தளம் (www.slmmf.lk) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் அடுத்த தலைமுறை ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கத்திலான புதிய புலமைப்பரில் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வின் சிறப்பம்சமாக அமைப்பின் வளர்ச்சிக்காக மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஸ்தாபக போஷகரும் முன்னாள் தலைவருமான என்.எம்.அமீன் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அமைப்பின் வருடாந்த செயற்பாட்டறிக்கை வெளியிடப்பட்டதுடன் மறைந்த உறுப்பினர்களுக்கான நினைவேந்தலும் அனுஷ்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அங்கத்தவர்களுக்கான இரண்டாவது அமர்வில், முன்மொழியப்பட்ட அமைப்பின் யாப்புத் திருத்தம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
படங்கள் Aswer Mohammed










