மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய பதிவு சேவை கம்பஹா உட்பட ஐந்து மாவட்டங்களில் ஆரம்பம்

Rihmy Hakeem
By -
0

 


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய பதிவுகளை நாட்டின் 5 மாவட்டங்களில் ஆரம்பிக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து உப குழுவின் தலைவருமான பிரகீத் மதுரங்க மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) துஷார பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில்  நேற்று (19) முற்பகல் கம்பஹா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.


​இதற்கமைய, இதுவரை கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் புதிய பதிவுச் சேவைகள், நேற்று முதல் கம்பஹா, குருணாகல், அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


​இந்நிகழ்வில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) துஷார பெர்னாண்டோ அவர்களினால் அடையாளப்பூர்வமாக புதிய மோட்டார் சைக்கிள் பதிவுகள் செய்து வைக்கப்பட்டன.


​மோட்டார் சைக்கிள்களை புதிய பதிவு செய்யும் இச்சேவை, ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரு முறைகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அனைத்து மோட்டார் வாகனங்களையும் மாவட்ட பிரதி ஆணையாளர் அலுவலகங்கள் ஊடாகப் பதிவு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் இங்கு தெரிவித்தார்.


​இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகத் கித்சிறி, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் தாரக தேவப்பிரிய, கம்பஹா மாவட்ட பிரதி ஆணையாளர் களண ஜயநந்த, மோட்டார் வாகன பரிசோதகர் எம். ஆர். சேனாரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


​மாவட்ட ஊடகப் பிரிவு - கம்பஹா

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)