பூகொடை, குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயம் மாகாண மட்டத்தில் இரட்டை வரலாற்று சாதனை! மேல் மாகாண ரீதியில் இரு முதலிடங்கள்!

Rihmy Hakeem
By -
0

 


மேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட புகழ்பெற்ற "மகுடம் 2026" மணிமகுடம் சூடும் மாபெரும் பரிசளிப்பு விழா, இன்று (05.10.2026) பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


​இவ்விழாவில் குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயம் மேல் மாகாண மட்டத்தில் இரண்டு முதலிடங்களுக்கான விருதுகளைப் பெற்று பாடசாலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது.


​பாடசாலை பெற்ற முதலிடங்கள்:

  • ​🥇 அதிகூடிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்ற பாடசாலை

  • ​🥇 சிறந்த சுற்றுப்புற சூழலைக் கொண்ட பாடசாலை

​கல்வி அடைவு மட்டத்திலும், பசுமையான சூழல் பாதுகாப்பிலும் மேல் மாகாணத்திற்கே முன்மாதிரியாகத் திகழும் இப் பாடசாலையின் வரலாற்றுச் சாதனைக்கு உழைத்த அதிபர், அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC), பழைய மாணவர் சங்கங்கள் (OBA, OGA), அயராது பாடுபட்ட மாணவச் செல்வங்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உட்பட பலரும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


தகவல் : ரயீஸா ரஸ்ஸாக், பிரதி அதிபர்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)