36-வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா: அபார வெற்றிகளைப் பெற்ற கஹட்டோவிட்ட மேற்கு 'யுனைடட் இளைஞர் கழகம்'!
அத்தனகல்ல பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் (Division federation of Youth club, Attanagalla) ஏற்பாடு செய்த 36-வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் (36th National Youth Sports Meet 2026 - Attanagalla Division) பிரதேச மட்டப் போட்டிகள் நேற்றைய தினம் (03) ரன்பொகுனுகம பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டி நிகழ்வுகளில் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல இளைஞர் கழகங்கள் பங்கேற்றன. இதில் கஹட்டோவிட்ட மேற்கு (369 ஏ) கிராம உத்தியோகத்தர் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் 'யுனைடட் இளைஞர் கழகம்' (United Youth Club) சார்பில் போட்டியிட்ட வீரர்கள் தடகளப் போட்டிகளில் முன்னணி இடங்கள் பலவற்றைக் கைப்பற்றியதுடன், இக்கழகமானது அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கஹட்டோவிட்ட மேற்கு யுனைடட் இளைஞர் கழகத்தை சேர்ந்த மிஷால் மைதான சம்பியனாக (Ground Champion) தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும்.
யுனைடட் இளைஞர் கழக வீரர்களின் வெற்றி விவரங்கள்:
- 100 மீட்டர் ஓட்டப்போட்டி:
- முதலாம் இடம்: மிஷால் (Mishal)
- இரண்டாம் இடம்: ஸனீக் (Zaneek)
- 400 மீட்டர் ஓட்டப்போட்டி:
- முதலாம் இடம்: மிஷால் (Mishal)
- இரண்டாம் இடம்: ரயான் (Rayaan)
- 800 மீட்டர் ஓட்டப்போட்டி:
- முதலாம் இடம்: அம்ரு (Amru)
- இரண்டாம் இடம்: ரைஹான் (Raihan)
- மூன்றாம் இடம்: அம்மார் (Ammar)
- நான்காம் இடம்: ஹம்தான் (Hamdhan)
- நீளம் பாய்தல் (Long Jump):
- முதலாம் இடம்: ஸனீக் (Zaneek)
- குண்டு எறிதல் (Shot Put): மூன்றாம் இடம்: முஆத் (Muad)
- ஈட்டி எறிதல்
- முதலாம் இடம்: பைஸல்
பிரதேச மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற யுனைடட் இளைஞர் கழகத்தின் அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டுப் ரசிகர்களும் கிராம மக்களும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
![]() |












