முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் கட்டமாக, தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அரபுக் கல்லூரிகளின் நிர்வாக உறுப்பினர்களான அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2026.10.01 அன்று காலி Hall de Galle கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இப்பயிற்சிப் பட்டறை காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.
இதன்போது,
* அரபுக் கல்லூரிகளின் நிர்வாகக் கட்டமைப்பு
* நிதி ஆளுகை
* மாணவர் விவகாரங்கள்
போன்ற முக்கியமான மூன்று தலைப்புகள் தொடர்பில் பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இப்பயிற்சிப் பட்டறையில் வளவாளர்களாக,
* Prof. Dr. N. Gafoordeen – University of Colombo
* Prof. R. A. Sarjoon – South Eastern University of Sri Lanka
* Dr. M. H. M. Azhar – Director, Al Imam Bin Baz Arabic College
* Mr. Anas Azeez – Amana Bank
ஆகியோர் கலந்துகொண்டு, தமது அறிவு, அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வு முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் M. S. M. Nawas அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
ஊடகப் பிரிவு
முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்







