சியனே ஊடக வட்டத்தின் ஏற்பாட்டில், கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆலிமாக்களின் அறிவிப்பாற்றல் மற்றும் பேச்சுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கிலான "Raise Your Voice" எனும் சிறப்புச் செயலமர்வு எதிர்வரும் 11.10.2026 அன்று கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சியனே ஊடக வட்டத்தின் தலைவரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மட் முனவ்வர் தலைமையில் இச்செயலமர்வு இடம்பெறவுள்ளது.
இப்பயிற்சிப் பட்டறையில்,
- சாகிர் மொஹமட் BA (ஒலிபரப்பாளர், நாடகக் கலைஞர் - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)
- பஸ்ஹான் நவாஸ் (செய்தி ஆசிரியர் - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்)
- எஸ்.ஏ.எம்.பவாஸ் MA (செயலாளர் - சியானே ஊடக வட்டம் / தகவல் அதிகாரி - அரசாங்க தகவல் திணைக்களம்)
ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.


