(ஸனா அன்ஜும்)
சிந்தனையாளர், ஆன்மீகவாதி, இலக்கியவாதி, கவிஞர், எழுத்தாளர், வளவாளர் மற்றும் பன்னூல் ஆசிரியர் எனப் பன்முக ஆளுமை கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் பொதுச் செயலாளர் அல்-உஸ்தாத் அஷ்-ஷைக் எஸ்.அப்துல் நாஸிர் ஹழ்ரத் அவர்களின் அர்-ரபீ (B) எனும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புகழ் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
இலங்கை தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளரும், மீடியா லிங்கின் தவிசாளருமான அல்-ஹாஜ் எம்.எஸ்.எம். நியாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெறவிருக்கின்ற இந்நிகழ்வானது எதிர்வரும் 2026.10.21 புதன்கிழமை, மாலை 03:45 மணிமுதல் 06:00 மணிவரை கொழும்பு 10 டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையிலுள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.
மேலும் ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கௌரவ அல்-ஹாஜ் அஹ்ஸன் மரிக்கார், LLM (Col) அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
அத்துடன் கௌரவ அதிதிகளாக, கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்- ஷைக் அல்-ஹாஜ் ஐ.எம். தாலிப் அவர்கள் நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்த உள்ளார். மற்றும் மதீனத் அல் இல்ம் கல்லூரியின் ஆசிரியரும், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தலைவருமான அறிஞர், கவிஞர் அஷ்-ஷைக் எம்.பி(பி).எம். ஹிஷாம் (பத்தாஹி) அவர்கள் நூல் பற்றிய ஓர் ஆய்வு உரையை நிகழ்த்த உள்ளார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறார்கள்.
தொடர்புகளுக்கு: 0777814108

