இஸ்லாம் பாடத்திட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் (படங்கள்)

Rihmy Hakeem
By -
0




2027ஆம் ஆண்டுக்கான இஸ்லாம் பாடத்திற்கான புதிய பாடத்திட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பான  விசேட கலந்துரையாடலொன்று நேற்று (30) புதன்கிழமை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்றது.


குறிப்பாக O/L, A/L தரங்களுக்கான இஸ்லாம் பாடம், அல்குர்ஆன் மத்ரஸா, அகதிய்யா உள்ளிட்ட பாடத்திட்டங்களில் இடம்பெற வேண்டிய அத்தியாவசிய மாற்றங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. 


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸூடனான இந்த கலந்துரையாடலில் அகில  இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் இணைச் செயலாளரும் கலீபதுஷ் ஷாதுலியுமான அஷ்ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹசன் (நளீமி), கொழும்பு மஹ்மூதியா அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி சீ.ஐ.எம். அஸ்மிர் (ஹசனி), கொழும்பு அஜ்வாத் அல் பாசி அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி அஹமட் சூபி (மஹ்லரி), கஹட்டோவிட்ட முஅஸ்கர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி எம்.என்.எம். இக்ராம் (அல் பாசி), மௌலவி அஹமட் சஹீல் (அல் அஸ்ஹரி) ஜித்தாவிற்கான இலங்கையின் முன்னாள் கொன்சியூலர் பலாஹ் மௌலானா மற்றும் இஸ்லாமிய ஆன்மீக செயற்பட்டாளராக நகீப் மௌலான உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Thanks - Vidiyal








கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)