மக்காவில் மிகவும் சிறப்பாக நடந்தேறிய நிகாஹ் பைபவம்
சர்வதேச ரீதியில் மனிதனாபிமான பணிகளை மேற்கொண்டு வரும் அல்ஹாஜ் ஜிப்ரி அவர்களின் மகனின் திருமணம் மக்காவில் நடைபெற்றமை அவரை அல்லாஹ் கௌரவப்படுத்தி இருக்கிறான் போலும்.
அல்ஹம்துலில்லாஹ்!
மல்வானையைச் சேர்ந்த கலாநிதி அல்ஹாஜ் ஜிப்ரி அவர்களின் மகன் அஹ்மத் பாஸில் அவர்களின் நிகாஹ் வைபவம் புனித மக்கா நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மக்காவில் உள்ள இமாம்கள் மற்றும் தொழிலதிபர்கள், இலங்கையைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் அவரது குடும்பம் கலந்துகொண்டு, சவூதி அரேபிய கலாசார முறைப்படி இந்நிகழ்வு நடைபெற்றமை மகிழ்ச்சியளிக்கிறது.
முழு திருமறையை மனனம் செய்துள்ள அஹ்மத் பாஸில், இளம் வயதிலேயே சமூக சேவையில் ஆர்வம் கொண்டவராகவும், தனது வருமானத்திலிருந்து தர்மம் செய்பவராகவும் இருப்பதை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறேன். இன்று வரை இவரது தர்மங்களையும் இவரது தந்தை செய்யும் தர்மங்களையும் எனக்கு மிகவும் நன்கு தெரியும் என்ற வகையில் இவர்களது மனிதாபிமான பணிகளை பெரிதும் மெச்சுகிறேன்.
இந்தத் திருமணத்தைப் பற்றிய விமர்சனங்களை விட, அந்தக் குடும்பத்தின் சமூகப் பங்களிப்பையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
அல்ஹாஜ் ஜிப்ரி அவர்களுடன் எனக்கு 18 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்பு உள்ளது. இலங்கையின் பல மாவட்டங்களில் ஏழைகள், விதவைகள், அங்கவீனர்கள் உள்ளிட்ட நலிவுற்ற மக்களுக்காக அவர் ஆற்றிவரும் பணிகளை நான் நன்கு அறிவேன். சர்வதேச ரீதியிலும் பல நாடுகளில், குறிப்பாக பலஸ்தீன் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில், மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
அனர்த்தங்கள் ஏற்படும்போது உதவிக்கரம் நீட்டுவதிலும், வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் குடும்பங்களுக்குத் துணைநிற்பதிலும் அவர் காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. அண்மையிலும் நாடளாவிய ரீதியில் நலிவுற்ற விதவைப் பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளில் நான் தனிப்பட்ட முறையில் பங்கேற்று வருவதுடன், என்னுடன் இணைந்து இன்னும் பலரும் இத்தகைய சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இவை வெறும் கேள்விப்பட்ட செய்திகள் அல்ல; நேரடியாக அறிந்த அனுபவங்களின் அடிப்படையில் கூறுகின்ற கருத்துகளாகும்.
ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதேவேளை, ஒருவரின் தனிப்பட்ட குடும்ப நிகழ்வு குறித்து மதிப்பிடும்போது, அவரது பொருளாதார நிலைமை, சமூகப் பங்களிப்பு மற்றும் நிகழ்வு நடைபெற்ற சூழல் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மக்காவில் திருமணம் நடைபெற்றது என்பதற்காக மட்டும் அதனை மார்க்கத்திற்கு முரணானதாகவோ, ஏழைகளைப் புறக்கணித்த செயலாகவோ கருதுவது நியாயமான அணுகுமுறையாக இருக்காது. இவர்களைப் பொறுத்தவரையில் இவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருள்களை வைத்து பார்க்கும் போது இது ஒரு எளிமையான திருமணம் என்று கூட சொல்லலாம்
எனவே, ஒரு திருமணம் நடைபெற்ற இடத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் சமூகப் பொறுப்புணர்வைத் தீர்மானிப்பதைவிட, அவரது ஒட்டுமொத்த வாழ்க்கைப் பணிகளையும் கவனத்தில் கொள்வதே நியாயமானது.
மக்காவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடாக அமைந்திருக்கலாம். இதனை ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியான நிகழ்வாகப் பார்த்து, தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
விமர்சிப்பதற்கு முன் ஒருவரின் சேவைகளையும் அறிந்துகொள்வோம். தனிப்பட்ட நிகழ்வுகளை மட்டும் வைத்து ஒருவரின் சமூகப் பங்களிப்பை மறந்துவிட வேண்டாம்.
தம்பி பாழில் மிகவும் ஒழுக்கமுள்ள பண்பாடு உள்ள இரக்கமுள்ள தயாள குணம் கொண்ட ஒரு வாலிபன்.
அல்லாஹ் அஹ்மத் பாஸில் அவர்களின் திருமண வாழ்வில் பரகத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கி, அவர்களைச் சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக வாழச் செய்வானாக!
ஆமீன்!
(Asheik Abdul Azeez Moulavi- Naleemi)











